காசா மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேலிய படைகள் நிறுத்தின
காசாவை கைப்பற்றும் பாரிய தாக்குதலுக்கு முன்னதாக, காசா நகரத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேலியப் படைகள் நிறுத்தியுள்ளன.
அதேநேரம், நிவாரணப் பாரவூர்திகள் நுழைவதைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், காசாவின் மக்களை வெளியேற்றும், இஸ்ரேலியர்களின் திட்டங்கள் சாத்தியமற்றவை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் அதிகரித்து வரும் எதிர்ப்பு மற்றும் காசாவில் பொதுமக்களுக்குப் பேரழிவு தரும் என்ற எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இஸ்ரேல் காசா நகரத்தைக் கைப்பற்றத் தயாராகி வருகிறது.
எனினும், இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உயிர்களுக்கு ஆபத்து நேரலாம் என எச்சரித்துள்ள டெல் அவிவ்வின் போராட்டக்காரர்கள், அரசாங்கம் தனது தாக்குதலை அதிகரிப்பதற்குப் பதிலாகப் போர் நிறுத்தத்தைத் தொடர வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில், சுமார் 47 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவமனை தரப்புகள் தெரிவிக்கின்றன.
