
காசா மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் சர்வதேச ராணுவ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடத்தை ஹிட்லரைப் போலவே இருப்பதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் யூத மக்கள் மீது நாஜி படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு நிகரானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு சரியான தீர்வு காண ஆதரவளிக்கும் துருக்கி, காசா பகுதி மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் சர்வதேச ராணுவ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது.
