காசாவில் மீண்டும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் நிலையில், அங்கு இஸ்ரேலியப் படைகளால் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஹமாஸின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஜெய்டவுன், சப்ராவின் குடியிருப்புப் பகுதிகள் கடந்த மூன்று நாள்களாகக் குண்டுகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

அவை பொதுமக்கள் வீடுகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன.

அதேநேரம், இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்க முடியவில்லை என ஹமாஸின் பேச்சாளர் மஹ்மூத் பஸ்ஸல் கூறியுள்ளார்.

இதேநேரம் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை “தங்கள் கண்களுக்கு முன்பாகப் பஞ்சம் பரவி வருகிறது” என குறிப்பிட்டுள்ளன. பட்டினியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.