
காசாவில் தீவிர பனிப்பொழிவு
பாலஸ்தீன காசா பகுதியில் கடுமையான குளிர் மற்றும் தீவிர பனிப்பொழிவு காரணமாக இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர பனிப்பொழிவு காரணமாக சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்தநிலையில் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் தொடர்வதன்ன காரணமாக மீட்பு பணிகள் சவாலான நிலைக்கு உள்ளாகியுள்ளன.
மீட்பு குழுக்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று, உயிரிழந்தோரைக் காப்பாற்ற முயற்சித்து வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பனிப்பொழிவு மற்றும் கடுமையான குளிர் காரணமாக வீதிகள் பனிப்பரப்பால் மூடப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்சாரம், நீர் மற்றும் தொடர்பு சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில்,அதிகாரிகள், பொதுமக்களை அபாயமான கட்டிடங்களை விட்டு வெளியே செல்லவும், பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
பாடசாலைகள் சில இடங்களில் மூடப்பட்டுள்ளதுடன் பொது சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
