காசாவில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

காசாவில் தமது தரைவழி நடவடிக்கைகளை நீடித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை 430க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு கூறியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காசாவின் நெட்சாரிம் பகுதியை நோக்கித் தங்களது படைவீரர்கள் நகர்ந்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விளைவாகக் காசா மீதான இந்த தாக்குதல்கள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெய்ர் அல்-பலாவில் உள்ள தங்களது வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தையடுத்து, தங்களது ஊழியர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க மறுத்துள்ளது.