காசாவில் இருந்து பிரித்தானிய பிரஜைகள் வெளியேற்றம்
காசாவில் இருந்து 150க்கும் மேற்பட்ட பிரித்தானிய பிரஜைகள் வெளியேறி, அவர்கள் ரஃபா வழியாக எகிப்தை சென்றடைந்துள்ளதாக, பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதில், இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் இணைந்து பிரித்தானியா தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அத்துடன் கனடா, ஜேர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் 600 பிரஜைகளும் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவுக்கும், எகிப்துக்கும் இடையேயான ராஃபா எல்லை, கடந்த வாரம் முதல் பல தடவைகள் திறக்கப்பட்டு, பெரும்பாலான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்