காசாவில் இருந்து இதுவரை 400 இற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்

காசாவில் இருந்து இதுவரை 400 இற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெளியேறியவர்களுள் 300ற்கும் அதிகமானோர் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் எனவும், ஏனையோர் காயங்களுக்கு உள்ளான காசா நாட்டு பிரஜைகள் எனவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, மூன்று வாரங்களுக்கு பின்னர் எகிப்துக்கு செல்லும் ரஃபா பகுதி திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதி திறக்கப்பட்டதன் பின்னரே அதிகளவானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்க நாட்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களே அதிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காசாவில் தற்போது இணைய சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.