
காசாவில் இதுவரை 3 ஆயிரத்து 334 சிறார்கள் உயிரிழப்பு
இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களில் 41.75 சதவீதமானோர் சிறார்கள் .
இதன்படி, 3 ஆயிரத்து 334 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அங்குள்ள சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
