
காசாவின் பணப்பரிமாற்ற நிலையங்கள் மீது தாக்குதல் : 2.5 மில்லியன் டொலர்களை கைப்பற்றிய இஸ்ரேல் படைகள்
காசாவின் பணப்பரிமாற்ற நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பணப்பரிமாற்ற நிலையங்களில் இருந்து சுமார் 2.5 மில்லியன் டொலர்களை இஸ்ரேலிய படைகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் காசாவை விட்டு அதிகமான மக்கள் வெளியேறி வருவதாக உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவின் மத்திய பகுதியில், தொடர்ந்தும் இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
