காசாவின் ஜபாலியா முகாம் மீது வான்வழி தாக்குதல் – 25 பொதுமக்கள் பலி

காசாவில் உள்ள ஜபாலியா ஏதிலிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ஹமாஸ் தரப்பின் கொமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த தாக்குதலில் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பினரின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் உயிரிழந்தவர்களில் 25 பொது மக்களும் அடங்குவதாக செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் தரப்பினரின் நிலத்தடி உட்கட்டமைப்பு, பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

300 இலக்குகளை குறிவைத்து நேற்று செவ்வாய்க்கிழமை  வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.