காங்கேசன்துறை துறை முகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா நிதி ஒதுக்கீடு

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 61.5மில்லியன் டொலர் நிதி உதவியினை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு புதிய அலைதாங்கி கட்டப்படுவதுடன், சரக்கு கப்பல்கள் வந்துபோகும் விதமாக 30மீட்டர் வரை ஆழப்படுத்தப்படவுள்ளது.

கே.கே.எஸ் துறைமுகம் சரக்கு பெட்டகங்களை கையாளும் வகையில் ஒரு சரக்குகள் முனையமும் இந்திய சுற்றுலா பயணிகளை கையாளும் வகையில் சுற்றுலா முனையமும் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.