கவி பாரதி சனசமூக நிலையக் கட்டடம் திறந்து வைப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் கொட்டடி சோலைபுரம் கவி பாரதி சனசமூக நிலையத்திற்கான கட்டடம் மக்களினதும் அங்குள்ள இளைஞர்களினதும் முயற்சியினால் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படுள்ளது.
இந் நிகழ்வின் விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாண பிரதேச செயலர் திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இக்கட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்த கல்விக் காருண்யன் திரு.ESP.நாகரத்தினம் அவர்களால் திரைநீக்கம் செய்யப்பட்டது.
விருந்தினர்களாக யாழ் மாநகரசபை உறுபினர் சி.சாரூபன், மாநகரசபை உறுப்பினர் வாசு, சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளான இ.மகிதரன், தெ.நிஷாகரன், ஜோ.ரதீஸ் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதி மு. கோமகன், கிராமசேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கவி பாரதி சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.