கழிவறைக்கு முன்னால் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும் சிசுவும்

கொழும்பு 10, மாளிகாவத்தையில், சிசுவை பிரசவித்த நிலையில் தாயும், பிறந்த குழந்தையும், வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளனர் என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், கொழும்பு 10, மாளிகாவத்தையில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கணவன் அளித்த வாக்கு மூலத்தில் “இறந்த பெண்ணின் மைத்துனரிடமிருந்து செய்தி வந்ததும், வீட்டிற்கு சென்று பார்த்த போது அவளின் உடலிலும் தரையிலும் அதிக அளவு இரத்தம் இருந்தது”.

மேலும் மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை அந்த நேரத்தில் அவரது காலடியில் இருந்ததாகவும், குழந்தை தொப்புள் கொடியை வெட்டாமல் ஒரு துணியில் சுற்றப்பட்டிருந்ததாகவும், மனைவியும் குழந்தையும் முச்சக்கர வண்டியில் பொரளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

தாய் – சிசு மரணங்கள் குறித்து விசாரணையைத் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க