கள்ளநோட்டு அச்சிட பயன்படுத்திய இயந்திரத்துடன் ஐவர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை குச்சவெளி பொலிசாரினால் கள்ள நோட்டுகளை அச்சிடுவதற்கு பயன்படுத்திய இயந்திரத்துடன் 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குச்சவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கள்ள நோட்டுகளை பயன்படுத்தி பெற்றோல் நிரப்பும்போது புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் பெறப்பட்ட தகவலை அடுத்து முல்லைதீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கள்ள நோட்டுக்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரத்துடன் ஜந்து பேரை கைது செய்துள்ளதாகவும் குச்சவெளி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முல்லைதீவு- புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 21, 23 மற்றும் 40 வயதுடைய மூவரும் குச்சவெளி சலப்பையாறு பகுதியைச் சேர்ந்த 23 , 27 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிசார் தெரிவித்தனர்.
