கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடிக்க சென்ற பொலிஸ் குழுவினரை தாக்கிய குளவிகள்!

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதும்பிடிய ரபர்வத்தை பகுதிக்கு சென்ற பொலிஸ் குழுவினரை மீதும்பிடிய ரபர்வத்தை பகுதிக்கு செல்லும் வழியிலேயே குளவி கூடு ஒன்று கலைந்து குறித்த பொலிஸ் குழுவினரை தாக்கியுள்ளது.

இதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பசறை வைத்தியசாலையில் வாட்டு இலக்கம் 2 ல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்