கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவர்

இந்தியாவில் காட்டுப் பகுதியிலிருந்து கணவனால் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள போரியா மாவட்டத்தில் உள்ள சட்கி என்ற கிராமத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான மாலோதி சோரன் என்கிற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் சகோதரி ராணி சோரேன் கொடுத்த வாக்குமூலத்தின்படி,  மாலோதிக்கு தேலு என்ற நபருடன் பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் இரு ஆண், ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில மாத காலமாகவே மாலோதியின் கணவர் தேலுவுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு தவறான உறவு இருந்துள்ளது.

இது மாலோதி கணவரை கண்டித்துள்ளார்.மேலும் தம்பதி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவர் தேலு மனைவியை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதனால், மாலோதி கடந்த மாதம் வீட்டில் இருந்து தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் ஏப்ரல் 19 ஆம் திகதி அன்று தேலு அந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் மாலோதிக்கு தெரியவரவே, கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி தனது கணவர் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார்.

கணவர் வீட்டுக்கு சென்ற மாலோதி மாயமான நிலையில், பெண்ணின் வீட்டார் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சட்கி என்ற கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே இடத்தில் அந்த பெண்ணின் உடைகள், மோட்டார் வண்டியின் சாவி போன்ற பொருள்களும் எடுக்கப்பட்டன. இதன் மூலமே மாலோதி படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து கணவர் தேலுவை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்