களையிழந்துள்ள தீபாவளி கொண்டாட்ட வியாபாரம்

-மன்னார் நிருபர்-

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பொருட்களின் விலை ஏற்றம்  காரணமாகவும் மன்னார் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான பொருட்களை கொள்வனவு செய்வதில்  மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

குறிப்பாக பொருட்கள் மற்றும் ஆடைகள் விலைகள் அதிகரித்துள்ளமையினால் மக்கள் பொருட்கள்  மற்றும் ஆடை கொள்வனவில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

மேலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் பஜார் பகுதி உள்ளடங்கலாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மக்களின் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது.