களுவாஞ்சிக்குடி மகிழூரில் முதலுதவி பயிற்சிப் பட்டறை
களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று , களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம். சமுர்த்தி , ஆர்சிபி(RCB) மக்கள் அமைப்பு மற்றும் சேரி(Ceri)நிறுவனத்தின் அனுசரணையில் கடந்த புதன்கிழமை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரனின் வழிகாட்டலில் த.சபியதாசின் ஒழுங்கு படுத்தவுடன் மகிழூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகலாக திருமதி சத்தியகெளரி தரணிதரன் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி சதீஸ்வரி கிருபாகரன் சேரி நிறுவனத்தின் முகாமையாளர், பாடசாலை அதிபர் .தி.செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்தநிகழ்வில் சமுர்த்தி சமூதாய அடிப்படை மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சம்மேளன தலைவர் , 43 இளைஞர் யுவதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய விரிவுரையாளர்களால் மிகவும் சிறப்பான முறையில் பயிற்சிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





