களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனையும் பொலிஸ் அணிவகுப்பும்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுண பொலிஸ் பரிசோதனை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர்  G லீலாரத்ன கலந்து கொண்டார்.

மேலும். உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் – K.M.A.K பண்டார, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி – G.M.Sகஜநாயக்க கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பரிசோதனை நடாத்தினார், அணிநடை வகுப்பு மரியாதை, அணிநடை கண்காட்சி, வாகனப்பரிசோதனை, கட்டடப் பரிசோதனை என்பன இடம்பெற்றன.