களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு செல்லும் வீதி காப்பெட் வீதியாக மாற்றம்

கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்துக்குச் செல்லுகின்ற வீதி காப்பெட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளித்தி வைபவம் நடைபெற இருக்கின்ற இந்த நிலையில், வைகாசி பொங்கலுக்காககதவுகள் திறந்து அதே போன்று தினப்பூசைகள் குடிப்பூசைகள் இடம்பெற்று திருக்குளித்தி நடைபெற இருக்கின்ற இந்த நேரத்தில் இந்த வீதி காப்பெட் வீதியாகமாற்றப்பட்டுள்ளது.

இதனை பலரும் வரவேற்கின்றனர், இந்த வீதி காப்பெட் வீதியாக மாற்றப்பட்டதனூடாக பல பக்தர்கள் பயன் பெற இருக்கின்றனர்,  எனவே களுவாஞ்சிக்குடி அம்மன் வீதி புனரiமைக்கப்பட்டது பிரதேச மக்களிடையே பேசும் பொருளாக அமைந்திருக்கின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்