
களுவாஞ்சிக்குடியில் பல வீடுகளில் திருடர்கள் கைவரிசை : அச்சத்தில் மக்கள்
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதி மற்றும் அதை அண்டிய உள் வீதிகளில் உள்ள ஆறு வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
எனினும், சிறு தொகைப்பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
நேற்று சனிக்கிழமை இரவு 10.15 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை திரூடர்கள் நடமாட்டம் இருந்ததாக அப்பகுதி வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு குழுவே இதில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர், வர்த்தகர், தாதிய உத்தியோகத்தர், ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர், ஓய்வு பெற்ற பிரதம முகாமைத்துவ உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் வீட்டிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு முகத்தில் திரவம் தெளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் கண்கள் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வீடுகளின் ஜன்னல்களை உடைத்து அதன் ஊடாக உட்செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
