களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிக்குடா ஜெகன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்றது, இரண்டாம் இடத்தை சில்லுக்கொடியாறு பராசக்தி விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

45 அணிகள் பங்குபற்றிய இப்போட்டி 03 நாட்கள் இடம்பெற்றது

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மற்றும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மேளத்தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது போட்டியில் முதலிடம் ,இரண்டாம் பெற்ற அணிகளுக்கு பதக்கங்களும், கேடயங்களும் ,காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.