களுத்துறையில்  போதைப்பொருளுடன் இளைஞன் கைது

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெமுனு மாவத்தை பகுதியில் போலி ஆவணங்கள், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இளைஞன் ஒருவன் நேற்று புதன்கிழமை பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைதுசெய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரான இளைஞனிடமிருந்து போலி ஆவணங்கள், 06 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 4 கூரிய ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.