களனி மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டு
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் புவக்பிட்டியவிற்கும் அவிசாவளைக்கும் இடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, களனி மார்க்கத்திலான ரயில் சேவைகள் கொஸ்கம வரை மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.