
களனி – பெதியாகொடவில் வீடொன்றில் தீப்பரவல்
களனி – பெதியாகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமே திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் அல்லது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மீட்புப் பணிகள் மற்றும் தீயை அணைக்கும் முயற்சிகளில் காவல்துறை மற்றும் தீயணைப்புப் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
