களஞ்சியசாலைகளிலிருந்து மாயமான நெல்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் காணப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் தொகை காணாமல் போயுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஐந்து நெல் களஞ்சியசாலைகளில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக சந்தைப்படுத்தல் சபையின் உள்ளக ஊழியர்கள் குழுவொன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பிலான முழுமையான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்குமாறு விவசாய அமைச்சர், நெல் சந்தைப்படுத்தல் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் முழுமையான விசாரணைக்காக இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.