கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவனுக்கு எமனாக மாறிய முடி உலர்த்தி
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்குள்ளாகி இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே இவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது மரண விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம், மின்சாரம் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்து ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
இவரது சடலம் இன்று வியாழக்கிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டவுள்ளடதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்