
கல்வி கூட்டுறவு சங்க தேர்தலில் ஜெஸ்மீர் ஆசிரியர் வெற்றி
-மூதூர் நிருபர்-
கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் மாகாண பொதுச் சேவை பேராளர்களை தேர்வு செய்வதற்கான மூதூர் கல்வி வலயத்திற்கான தேர்தலில் ஜுனைட் ஜெஸ்மீர் ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான தேர்தல் மூதூர் அந்தோனியர் மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றது.
இதில் மூதூர் கல்வி வலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் ஜுனைட் ஜெஸ்மீர் ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் அவருக்கு தோப்பூர் வர்த்தக சங்கத் தலைவர் நிசார் அலி தலைமையில் இன்று பகல் மாலை அணிவிக்கப்பட்டு பட்டாசு கொளுத்தி வரவேற்கப்பளிக்கப்பட்டது.
அத்தோடு தோப்பூர் பிரதேச மக்களும் கைகுலுக்கி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


