கல்வி அமைச்சிற்கு எதிராக முகப்புத்தகத்தில் மோசடி

அரசாங்க பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை தடுக்க சதி செய்து முகப்புத்தகம்  மூலம் பணம் வசூலிக்கும் மோசடி தகவல் அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறி, இவ்வாறு பணம் வசூல் செய்வதாக கல்வி அமைச்சிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டிற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் சமரச தீர்வு மூலம் 4,700 அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வழக்குப்பதிவு செய்து பணி நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்கில் சிலர் இவ்வாறு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்