கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தடையை மீறிச் செயற்படும் தனிநபர் அல்லது நிறுவனம், பரீட்சைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் கருதப்படும் எனப் பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதுமுள்ள 2362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.