
கல்விச் சீர்திருத்தங்கள் விவகாரம்: எதிர்க்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை சாடிய ஜனாதிபதி!
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கம்பளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, பொய்யான கதைகளை உருவாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் முன்னேற்றப் பாதையை திசைதிருப்ப முடியாது என தெரிவித்தார்.
“இந்த சீர்திருத்தங்களை மிகத் தீவிரமாக எதிர்த்த ஒருவர், இப்போது அது ஏன் நிறுத்தப்பட்டது என்று எங்களிடமே கேட்கிறார்,” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அண்மைய கருத்துக்களை சுட்டிக்காட்டியே ஜனாதிபதி இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
