கல்லீரல் பிரச்சனையை உண்டாக்கும் உணவுகள்

கல்லீரல் பிரச்சனையை உண்டாக்கும் உணவுகள்

கல்லீரல் பிரச்சனையை உண்டாக்கும் உணவுகள்

⭕தற்போது மக்களுக்கு வரும் நோய்களில் 90 சதவீதம் உணவுப் பழக்கத்தால் தான் ஏற்படுகிறது. குறிப்பாக இது இளைஞர்களிடையே பொதுவாக காணப்படுகிறது. குறிப்பாக வெளியில் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிட்டு, மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர். கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரல் நமது உடலில் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. ஆனால் சிலர் சில ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் கல்லீரலை ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள்.

⭕மது பழக்கம் இல்லாவிட்டாலும், அதிக ஆபத்தான உணவுகளை சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கிறது. அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளை சாப்பிடுவது முதல் தினசரி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது வரை எனப் பல வழிகளில் நமது கல்லீரல் பாதிக்கப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலை பாதிக்கும் சில உணவுகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

பால் பொருட்கள்

🔹பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற அதிக கொழுப்புள்ள பால் பொருட்களும் கொழுப்பு கல்லீரல் ஏற்பட காரணமாக இருக்கிறது. இவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமுள்ளதால், அவை கல்லீரல் கொழுப்பு வேகமாக அதிகரிக்கும்.

வறுத்த உணவுகள்

🔹பிரெஞ்ச் ஃப்ரைஸ், ஜங்க் ஃபுட்: ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பர்கர்கள், சிப்ஸ், பீட்ஸா போன்ற வறுத்த உணவுகளில் கொழுப்புகள் அதிகமாக உள்ளது. நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் நம் கல்லீரலுக்கு ஆரோக்கியமற்றதாகும். வறுத்த உணவுகளில் அதிகளவு கொழுப்பு உள்ளது. இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு சிரோசிஸ் நோய் உண்டாகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

🔹தொத்திறைச்சி, பன்றி இறைச்சி, ஹாட் டாக் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. இவை கல்லீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இது கல்லீரலில் கொழுப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், சிவப்பு இறைச்சியில் நம் உடலுக்கு தேவையான ப்ரோடீன்கள் இருந்தாலும், இறைச்சி உணவுகள் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் அதிகப்படியான ப்ரோடீன் உடலில் சேர்வதால் பல்வேறு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் உருவாகின்றன.

சர்க்கரை பானங்கள்

🔹தினமும் அதிகப்படியான சர்க்கரையை உண்டால் உங்களின் கல்லீரல் மிகவும் மோசமாக பாதிக்கும். சோடா, எனர்ஜி ட்ரிங்க்கள், பழச்சாறுகள் ஆகியவை கல்லீரல் பாதிக்கப்பட முக்கிய காரணமாக இருக்கலாம். இவற்றில் அதிக அளவு பிரக்டோஸ் உள்ளதால், கல்லீரலில் கொழுப்பை சேமிக்க உதவுகிறது. எனவே இதனை தினமும் சாப்பிடுவதால், கல்லீரல் நோய் வரலாம். மேலும், தானியங்கள், இனிப்புகள், கேக் போன்ற அனைத்து சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களையும் முற்றிலும் தவிர்க்கவும்.

கார்போஹைட்ரேட் உணவுகள்

🔹வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்பு கல்லீரல் ஏற்பட காரணமாக இருக்கிறது. இந்த உணவுகளில் சர்க்கரை அதிகம் மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது. எனவே அதனை அதிகப்படியாக சாப்பிடுவதன் காரணமாக, கல்லீரல் கொழுப்பு வேகமாக அதிகரிக்க தொடங்குகிறது.

கல்லீரல் பிரச்சனையை உண்டாக்கும் உணவுகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்