
கல்லால் தாக்கப்பட்டு பெண் கொலை
பொரளை கலபிடமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பணத் தகராறு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது நபர் ஒருவர் தனது மனைவியின் தாயாரை கல்லால் தாக்கியுள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்த குறித்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வீட்டிலிருந்த மனைவி மற்றும் மகள் மீதும் கூரிய ஆயுதத்தினால் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் கரவனெல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கலபிடமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
