
கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
கடந்த டிட்வா புயலினால் கடற்கரையினை அன்டிய பிரதேசங்கள் பொலீத்தீன் பிளாஸ்டிக் மற்றும் வேறு கழிவு பொருட்கள் காணப்படுவதினால்
இலங்கை செஞ்சிலுவை சங்கம் மட்டக்களப்பு கிளையும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து
கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம் மேற்கொண்டுள்ளனர்.
செஞ்சிலுவை சங்க உதவிபணிப்பாளர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் , பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் பொலிஸ், மாநகரசபை ,கிராம மட்ட அமைப்புகள் விளையாட்டு கழகங்கள், செஞ்சிலுவை சங்க தன்னார்வ தொண்டர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.




