
கல்மேகியின் கோரத்தாண்டவம் : நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி!
கல்மேகி புயல் தாக்கியதில் பிலிப்பைன்ஸில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், வியட்நாமில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மணிக்கு 149 KM வேகத்தில் காற்றுடன் மத்திய வியட்நாம் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய குறித்த புயல், அந்த பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த புயலானது தற்போது கம்போடியா மற்றும் லாவோஸை நோக்கி மேற்கு நோக்கி நகர்வதாகச் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சமாளிக்க இராணுவம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாடசாலைகள் மற்றும் ஏனைய பொதுக் கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
