கல்முனை மாவடிப்பள்ளி பிரதேச வயல் வெளிகளை ஆக்கிரமித்துள்ள காட்டுயானைகள் : கண்கவரும் காட்சிகள் (வீடியோ இணைப்பு)

கல்முனை மாவடிப்பள்ளி வயல் கண்ட வயல்வெளிகளில் காட்டுயானைகள்; உணவைத் தேடி வருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் நிலையில் இந்த காட்ட யானை கூட்டம் படையெடுத்துள்ளன.

காட்டு யானைக் கூட்டத்துடன் அதிகளவான குட்டி யானைகளும் காணப்படுவதால் இதனை பார்வையிட அதிகளவிலான மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை காட்டுயானைகள் கூட்டமாக இருப்பதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை எனவும் , காட்டுயானை கூட்டமானது ஆற்றுபடுக்கைகளில் குட்டிகளுடன் குளிப்பதை பார்வையிட மக்கள் இப்பகுதிக்கு அதிகம் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலை தொடர்ந்தால் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களினை சூழ காணப்படும் கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு போன்ற பிரதேசங்களுக்கு ஆபத்தானதாகக எதிர்காலத்தில் எனவும், இக்காட்டு யானை கூட்டம் தொடர்ந்து 02 வருடங்களாக வந்தாலும் இம்முறையே பெரிய கூட்டமாக வருகை தந்துள்ளதாகவும் , இதனை பெருங்காட்டுப்பகுதிக்குள் விரட்டுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.