கல்முனை மாநகர சபையினால் நூராணியா மையவாடி சிரமதானம்
-அம்பாறை நிருபர்-
கல்முனை மாநகர சபையின் சேவை விநியோக மேம்பாடு திட்டத்தின் கீழ் கல்முனை நூராணியா மையவாடியை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் வேலைத் திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இம்மையவாடியானது மாநகர சபை ஊழியர்களினால் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டு, கழிவுகள் யாவும் திண்மக் கழிவகற்றல் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
மாநகர சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான எம்.அமீர், எம்.எம்.நிஸார் மற்றும் மேற்பார்வையாளர்கள் சிரமதானப் பணிகளை நெறிப்படுத்தியிருந்தனர்.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் விஷேட ஆலோசனை, வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேலைத் திட்டம் கல்முனை தமிழ் பிரிவு இந்து மயானத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இன்று புதன்கிழமை மருதமுனை அக்பர் மையவாடியிலும் நாளை வியாழக்கிழமை சாய்ந்தமருது தக்வா மையவாடியிலும் அதனைத் தொடர்ந்து நற்பிட்டிமுனை போன்ற பகுதிகளிலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்