கல்முனை மாநகர சபைக்கு அஷ்ரப் தாஹிர் விஜயம்
-அம்பாறை நிருபர்-
கல்முனை மாநகர சபை தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது கல்முனை மாநகர எல்லைக்குற்பட்ட தெருமின் விளக்குகள், வீதிகள், வாடிகான்கள், திண்மக்கழிவகற்றல் தொடர்பான சவால்கள் மற்றும் மாநகர சபை ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கல்முனை பொதுச்சந்தை அபிவிருத்தி தொடர்பாகவும் தான் கவனம் செலுத்திவருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்திருந்தார்.
இதன்போது மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இருந்த காலப்பகுதியில் நிந்தவூர் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிபணியாற்றியமையை பாராளுமன்ற உறுப்பினர் நினைவு கூர்ந்ததுடன் தான் தவிசாளராக இருந்த காலத்தில் உள்ளூராட்சி உதவியாளர் சர்ஜூன் அவர்கள் நிந்தவூர் பிரதேச சபையில் கடமையாற்றியிருந்ததுடன் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாக இருந்தமையையும் நினைவு கூர்ந்திருந்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.ரி.எம். றாபி, கல்முனை மாநகர சபையின் உள்ளூராட்சி உதவியாளர் எம்.சர்ஜூன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமட் ஹமீட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.