
கல்முனை பிரதேச செயலக கணக்காளர் இலங்கை கணக்காளர் சேவை தரம் -01ற்கு பதவி உயர்வு
-சர்ஜுன் லாபீர்-
கல்முனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் யூ.எல் ஜவாஹிர் இலங்கை கணக்காளர் சேவை தரம் -01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் PSC/APP/06/1027/2022 ம் இலக்க கடிதத்திற்கு அமைய 2020/12/01 ம் திகதியில் இருந்து கணக்காளர் சேவை தரம்-01ற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
05ம் குளனியை பிறப்பிடமாகவும், மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் அம்பாறை மாவட்ட செயலகம், இறக்காமம், நாவிதன்வெளி, காரைதீவு பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார், என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
