கல்முனை – பாண்டிருப்பு பிரதான வீதியில் விபத்து ஒருவர் படுகாயம் -வீடியோ இணைப்பு-

-செ.துஜியந்தன்-

கல்முனை – பாண்டிருப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்முனையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இக் காட்சி அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே படுகாயமடைந்த நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.