கல்முனை சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எம் ஹுசைன் காலமானார்

-கல்முனை நிருபர்-

கல்முனை சாஹிரா கல்லூரியின் ஆசிரியராக பல வருடங்களும், அதிபராக சுமார் பத்து வருடங்களுக்கு மேல் கடைமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஏ.எம்ஹுசைன் அவர்கள் இன்று காலமானார்.

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சியில் ஆசிரியராக, பகுதி தலைவராக, பிரதி அதிபராக, அதிபராக இருந்து அப்பாடசாலைக்கு பாரிய அளவிலான பங்களிப்பினை செய்தவர்.

குறிப்பாக பல பௌதீக வள அபிவிருத்திகள் மட்டுமல்லாது, பல்கலைக் கழக தெரிவு, விளையாட்டுத்துறை மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் இப்பாடசாலை அன்று உச்சத்தை அடைவதற்குப் பாடுபட்டவர்.

இவருடைய காலத்தில் இக்கல்லூரி வளர்ச்சிப் பாதையில் சென்றதுடன், அன்னாரது நிருவாக மற்றும் செயற்றிறன் மிக்க செயற்பாடுகள் இன்றும் அப்பாடசாலையில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது மறுக்க முடியாத உண்மை.

அன்னாரின் ஜனாஸா இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் சாய்ந்தமருது தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.