கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் 1- 0 என்ற அடிப்படையில் வெற்றி

-அம்பாறை நிருபர்-

அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் பத்தாவது போட்டியின் போது கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியுள்ளது.

குறித்த சுற்றுத்தொடரில் மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் 1- 0 என்ற அடிப்படையில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தோடு இணைந்து அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்தும் அப்துல் அஸீஸ் ரூ சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் பத்தாவது போட்டி மிக விறுவிறுப்பாக மருதமுனை மசூர் மெளலானா மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றது.

இதன் போது மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகத்தை இடைவேளைக்கு முன்னர் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் கோல் ஒன்றினை போட்டு தனது திறமையை காட்டியிருந்தது.தொடர்ந்தும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மருதமுனை மருதம் விளையாட்டுக்கழகமானது தனது வீரர்களை கொண்டு கோல் போடும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

எனினும் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்ட கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் இப்போட்டியினை மிக விறு விறுப்பாக கொண்டு சென்ற நிலையில் மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகத்தை 1- 0 என்ற அடிப்படையில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

குறித்த போட்டியின் போது பல்வேறு நிறங்களில் வானவேடிக்கைகள் வெடிக்கச் செய்யப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டினை பெற்றதனை அவதானிக்க முடிந்தது.

மேலும் அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத்தின் தலைவர் எம்.பி.எம் றஷீட் விசேட அழைப்பை ஏற்று ABDUL AZIZ & SON’S நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் இச்சுற்றுத் தொடரின் பூரண அனுசரணையாளருமான அப்துல் அசீஸ் அப்துல் கபீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப் போட்டியை சிறப்பித்தார்.

அத்துடன் பிரபல தொழிலதிபரும் Mohamed Men’s Wear நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஏ.எச்.எம். தஸ்மீம் குறித்த போட்டிக்கு கௌரவ அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இது தவிர குறித்த போட்டியில் அம்பாறை மாவட்ட லீக்கின் பயிற்றுவிப்பாளரும் சிரேஷ்ட உடல்கல்வி ஆசிரியருமான யூ.எஸ்.சமீம் அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத்தின் தவிசாளரும் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியருமான எம்.எம்.பர்சான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கல்முனை சனிமௌன்ட்  விளையாட்டுக்கழகம் 1- 0 என்ற அடிப்படையில்  வெற்றி
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் 1- 0 என்ற அடிப்படையில் வெற்றி