கல்முனை கிரீன் பீல்ட் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்-

கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் கணவனை இழந்த விதவைகளுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் முகமாக கிரீன் பீல்ட் முஹைதீன் மஸ்ஜித் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் மிகவும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்ட கணவனை இழந்த 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கிரீன் பீல்ட் கமு/கமு/ரோயல் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கையுடனான இந்தியாவின் நீண்டகால உறவின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் உலருணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் முழுமையான பங்களிப்புடன் இந்திய உயஸ்தானிகரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கான இரண்டாவது இந்திய உயர்ஸ்தானிகரான வீ.அஷோக் குமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

இலங்கை இந்திய நற்புறவானது இன்று நேற்றானது அல்ல பல தசாப்தங்களாக நீடித்துக்கொண்டிருக்கக் கூடியதென்றும், எதிர்காலங்களிலும் தம்மால் முடியுமான உதவிகளை இந்தியா சார்பில் இலங்கைக்கு செய்வோம் எனவும் கூறி கல்முனை கிரீன் பீல்ட்டில் வசிக்கும் விதவைப் பயனாளர்கள் சம்மந்தமான விடயங்கள் பற்றி பரிந்துரைத்த ரஹமத் பவுண்டேஷன் அமைப்புக்கும் அதன் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கும் இந்நிகழ்வை ஒருங்கிணைப்புச் செய்த Y.W.M.A பேரவைக்கும் தனது விஷேட நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உரையாற்றுகையில்,

இது போன்ற மனிதநேயப்பணிகளைச் செய்வதற்கான தனது கோரிக்கையினை ஏற்று அதனை நிறைவேற்றித் தந்த இலங்கைக்கான இரண்டாவது இந்திய உயர்ஸ்தானிகரான வீ அஷோக் குமார் அவர்களுக்கும், இந்நிகழ்வை ஒருங்கிணைப்புச் செய்து நெறிப்படுத்திய Y.W.M.A பேரவைக்கும், இந்நிகழ்வை நிகழ்த்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கிரீன் பீல்ட் ரோயல் பாடசாலை அதிபர் ஏ.எல்.அன்சார், கிரீன் பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவ காரியாலயத்தின் தலைவர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் நிருவாக அங்கத்தவர்கள் அனைவருக்கும், முஹைதீன் மஸ்ஜித் பள்ளி நிருவாகத்தினர்களான தலைவர் ஏ.எல். நபீர், செயலாளர் எம்.எச்.அப்துல் கரீம், பொருலாளர் ஏ.எம். றியாஸ் உட்பட ஏனைய பள்ளி நிருவாக உறுப்பினர்கள்களுக்கும், மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பிரமுகர்களுக்கும் மற்றும் பயனாளர்களாக வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் பலவகையான மனித நேயப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பபிடத்தக்க விடயமாகும்.