
கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு
கல்முனை கார்மல் பற்றிமா தேசியக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டி ஏறாவூர் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற போது அரையிறுதிப் போட்டியில் அம்பிளாந்துறை மகா வித்தியாலயத்தையும், இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியையும் வெற்றி கொண்டு கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி 20 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளது.
கல்லூரி அதிபர் எஸ்.ஈ.றெஜினோல்ட் தலைமையிலான கல்வி சமூகம் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், பயிற்சி வழங்கிய உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.



