கல்முனை உணவகங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள வியாபார நிலையங்கள், உணவகங்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், கல்முனை மாநகர சபை ஆணையாளருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்களை பதிவு செய்கின்ற போது சுகாதார ரீதியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள், முறையான திண்மக் கழிவகற்றல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலின் போது பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகளான டொக்டர் என்.ரமேஷ், டொக்டர் திருமதி சரப்டீன், டொக்டர் என்.மதன், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்

மைமூனா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கான தளபாடங்கள் அன்பளிப்பு கல்முனை உணவகங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை கல்முனை உணவகங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24