கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் விபத்து : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால், கடந்த திங்கட்கிழமை மாலை, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை சேர்ந்த உதுமாலெப்பை முகம்மட் அன்பர் (வயது 61) என்பவரே இன்று வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின், பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.