கல்முனையில் விடுதி அறையின் மலசலகூடத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!
-அம்பாறை நிருபர்-
விடுதி அறையின் மலசல கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறையின் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த பெரிய நீலாவணை 02 செல்லத்துரை வீதியை சேர்ந்த 2 பெண் பிள்ளைகளின் தந்தையான மதிக்கத்தக்க பூசாரி சந்திரன் (வயது 54) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு குறித்த சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டார்.
இதன் போது துணி ஒன்றினை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்தமைக்கான அடையாளம் தென்பட்டுள்ளதாகவும் கழுத்து எழும்பு முறிவடைந்து மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையிடப்பட்டு உறவினர்களிடம் சடலம் இன்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.