
கல்முனையில் கட்டாக்காலி மாடுகளால் விபத்துச்சம்பவங்கள் அதிகரிப்பு
-கல்முனை நிருபர்-
கல்முனை பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது, இதன் காரணமாக வீதியில் பயணிப்போர் விபத்துக்களுக்குள்ளாகிவருகின்றனர், கல்முனை மாநகர சபை இவ் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை இல்லாதொழிப்பதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அண்மைக்காலமாக கல்முனை நகர் பகுதி அதனை அண்டிய பிரதேசங்களிலும் கட்டாக்காலி மாடுகள் அங்கும் இங்குமாக நடமாடிவருகின்றது.
வீதியின் நடுவில் படுத்துறங்குவதும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிற்பதுமாக மாடுகள் அலைவதனால் வாகனங்களில் பயணிப்போர் மிகுந்த அசௌகரியங்களுக்குள்ளாகிவருவதுடன், விபத்துக்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
அத்துடன் பாதையோரங்களில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், முதியோர்கள் இவ் கட்டாக்காலி மாடுகளனால் ஆபத்துக்களையும் சந்தித்து வருகின்றனர்.
கடந்த காலஙகளிலும் கல்முனை மாநகரசபையினால் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் வினசம் தெரிவிக்கின்றனர்.
கல்முனை நகர் பகுதியில் நடாடும் இவ் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை இறுக்கமான சட்டங்களை நடைமறைப்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
