கல்முனையில் கஜமுத்துக்குளுடன் ஒருவர் கைது

-கல்முனை நிருபர்-

கஜமுத்துக்களை (யானை தந்தம்) விற்பனை செய்ய முயன்ற இளைஞன் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை புறநகர் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நடமாடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரிடமிருந்து 4 கஜமுத்துக்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்தவர் திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்தவர் என, விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் உள்ளடங்கலாக சான்று பொருட்கள் அனைத்தும் சம்மாந்துறை பகுதியிலுள்ள ஜீவராசிகள் திணைக்கள பிரிவிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.