
கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து, 13 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
